சிம்மராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தலைமை பதவிகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். சந்தித்தவர்களால் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரியம் சிறப்பாக நடக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கலைத்துறையினர் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமாக இருக்கும். சிறியதாக தடைகள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் பேச்சு மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் அது போதும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று நீங்கள் சொன்ன சொல்லை பிள்ளைகள் கேட்டு நடந்து கொள்வார்கள். அதுபோலவே உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்று உழைப்பு இருக்கும். உழைப்பு இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாக காணப்படும்.
லாபத்தில் எல்லாம் எந்த குறையும் இல்லை. முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், மனம் அமைதியாகவே காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி சென்று நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் பாடங்களை படித்ததை எழுதிப் பாருங்கள், எழுதிப் பார்ப்பது என்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.