சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். ஆதாயம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய மைல்கல்லை இன்று நீங்கள் அடைவீர்கள். வாடிக்கையாளரிடம் ரொம்ப கனிவாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆதரவும் இருக்கும். இன்று லாபத்துக்கும், தனவரவு இருக்கும் எந்தவித குறைவும் இருக்காது. புதிய முயற்சிகள் நல்லபடியாகவே இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதலர்களால் நல்ல மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய இனிமையான சூழல் அமையக் கூடும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் சிறப்பாக செய்து நல்ல முன்னேற்றத்தையும் பாராட்டுகளையும் பெறக்கூடும். அதேபோல மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மனம் மகிழ கூடிய சூழல் இருக்கு. முடிந்தால் இன்று நீங்கள் ஆலய மட்டும் சென்று வாருங்கள், அது போதும். மனம் ரொம்ப அமைதியாகவும் நிம்மதியாகவும் காணப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு நீடிக்கும்.அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று எல்லா விஷயத்திலும் சிம்மராசிக்காரர்களுக்கு சிறப்பாகவே இருக்கு.
இன்று மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் அது போதும். ஆனால் படிப்பதை பற்றிய கவலைகள் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். முன்னேற்றமான சூழ்நிலை அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும். காரியத்தில் உள்ள வெற்றி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.