Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்”… சிக்கலான காரியத்தை எளிதாக முடிப்பீர்கள்..!!

தெளிவான சிந்தனை ஆற்றல் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாகும். சாமர்த்தியமாகவும் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் வளர்ச்சிக்காக சிலர் திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுப்பீர்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும். உங்களுடைய செயல் திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடும். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சியும்  ஏற்படும்.

இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை  கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதை சிறப்படையும். உங்களுடைய செல்வாக்கும் ஓங்கி நிற்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். இருந்தாலும் படத்தை ஒரு முறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பு. அதுபோலவே நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும், முக்கியமான காரியத்தை எதிர்கொள்வதாக இருந்தாலும் ஆரஞ்சு நிற ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |