சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சிலரது அதிருப்திக்கு உட்பட நேரிடும். பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது சிறப்பு. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று வாழ்க்கைத்துணை அனுகூலமாக இருப்பார்கள். மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது தீவிர ஆலோசித்து எதையும் செய்யுங்கள்.
இன்று விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். ஆனால் விளையாடும் போது மட்டும் ரொம்ப கவனமாக விளையாடுங்கள். இன்று கலை துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று திருமண முயற்சியும் சிறப்பாகவே கைகூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்