சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாளாக இருக்கும். சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் தொழில் நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வீடு வாகன பராமரிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். பணவரவு குறையும் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.
வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணத்தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அது பற்றி அதிகம் யோசிப்பார்கள். பெரியோர்களிடம் இன்று ஏதேனும் ஆலோசனை கேளுங்கள். உதவியாக இருக்கும். இன்று தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்று மாணவ செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்