Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று இனிமையான நாள்”… மற்றவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனம்..!!

சிந்தனையின் சொற்பமாக விளங்கும் சிம்மராசி அன்பர்களே…!! இன்று இனிமையான நாளாக இருக்கும். நெருங்கிய உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களும் விரிவடையும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். அதேபோல பொருட்களையும் கவனமாக பாதுகாத்து  கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.

ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகளை அனுப்புவது தாமதமாகத்தான் இருக்கும். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆனாலும் எதிர்பார்த்த படி இருப்பது கொஞ்சம் சிரமம்தான். மற்றவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இதை செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |