சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் உண்டாகும். இன்று அனைத்து விஷயங்களுமே ரொம்ப சிறப்பாக இருக்கும். ஆனால் செலவு மட்டும் கொஞ்சம் கூடும். இன்று முன்னேற வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். அனைத்து விஷயமுமே உங்களுக்கு சாதகமாக அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சேர்த்து வழிபடுங்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இன்று : உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை :
மேற்கு : திர்ஷ்ட எண் 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்