Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “நட்பு கொஞ்சம் பகையாக கூடும்”… பேசும்போது கவனம் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எளிதாகவே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். விலகிய பணம் அனைத்துமே வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நட்பு கொஞ்சம் பகையாக கூடும், பேசும்போது கவனமாக பேசுங்கள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம்  கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. இ ன்று அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். பொறுப்புகள் கூடி வரும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்திகரமான சூழல் இருக்கும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மனம் ஆனந்தமாக காணப்படும். பேசும்போது மட்டும் கவனம் பேசுங்கள்.கோபத்தை இன்று தவிர்த்து விடுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிற கைக்குட்டை எடுத்து செல்வது நல்லது. அனைத்து காரியங்களும் சிறப்பாகவே இருக்கும். அதே போல நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து விஷயங்களுக்கும்  வெற்றி கிடைக்கும். உங்களுடைய செல்வ நிலை உயரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |