Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவை வழிமறித்த சிறுத்தை…. பதறிய பயணிகள்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளிவந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பறவைகள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தை அப்பகுதியில் உள்ள கால்நடை மற்றும் கோழிகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டவயல் பகுதியிலிருந்து ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

இதனையடுத்து இந்த ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்ததால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் ஆட்டோவில் இருந்தவர்கள் அலறி சத்தம் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |