தனியார் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது இறந்து கிடப்பது 1 1/2 வயதுடைய பெண் சிறுத்தை ஆகும். மேலும் சிறுத்தை இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என கூறியுள்ளனர்.