தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடசோலை என்ற கிராமத்தில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடப்பது இரண்டு வயதுடைய சிறுத்தை என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தை இறந்து 20 நாட்களுக்கும் மேல் ஆவதால் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சிறுத்தை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.