Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதனால தான் இறந்துச்சா…? காயங்களுடன் கிடந்த சிறுத்தை…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

உடலில் ரத்த காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் அரசு தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அச்சத்தில் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வனத்துறையினர் உடலில் ரத்த காயங்களுடன் செடிகளுக்கு அடியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது இறந்து கிடந்தது மூன்று வயதுடைய சிறுத்தை எனவும், விலங்குகள் தாக்கியதால் அது உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |