Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி துடித்த கன்றுக்குட்டி…. அடித்து கொன்ற விலங்குகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தைகள் கன்றுக்குட்டியை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் விக்டர் என்பவருக்கு சொந்தமான கன்றுகுட்டி மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இடைசோலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் கன்றுக்குட்டியை அடித்து தூக்கி சென்றுள்ளது. அந்த கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அதன் பின் பொதுமக்கள் சத்தம் போட்டதால் கன்றுக்குட்டியை அங்கேயே போட்டுவிட்டு சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பட்டப்பகலில் கன்றுக்குட்டியை சிறுத்தைகள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் தனியாக செல்ல வேண்டாம் எனவும், வெளியே வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |