Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாறையில் ரெஸ்ட் எடுக்குது… நல்ல வேளை யாரும் இல்ல… வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

கருஞ்சிறுத்தை பாறையில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி சாலை ஓரத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ள பாறையில் கருஞ்சிறுத்தை படுத்து ஓய்வெடுத்துள்ளது.

இதனை அவ்வழியாக சென்ற சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கருஞ் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |