Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கதான் சுத்திட்டே இருக்கு… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் நடனமாடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சி அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இவ்வாறு அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |