Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுத்தை புலியின் நடமாட்டம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

பேருந்து நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பேருந்து நிலைய பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலரின் வீடு அமைந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை புலி நடமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சிறுத்தைப்புலி சேரம்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்சிகள் அந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |