ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் நேற்று மதியம் 1.50 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியிலிருந்து 167 கிலோ மீட்டர் ஆழத்திலும் பைசாபாத் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இதனையடுத்து இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.