கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1% வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 6.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கடந்த 17 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய சரிவை இந்தியா சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜிடிபி அளவானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உள்நாட்டு சிறுகுறு தொழில்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு முடுக்கப்பட்டதும் வேலையினமைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .