Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத C.M பொய்ன்னு சொல்லட்டும்…! 4 மாதத்திற்கு முன்பு… ஷாக்கிங் நியூஸ் சொன்ன அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட்  பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும்.

அந்த தீவிரவாதி ஒரு  அட்டாக் செய்ய ஒரு வண்டியை வாங்கி, அந்த வண்டி எடுத்துக்கிட்டு, ஒரு ஹிந்து பண்டிகை…  மக்கள் அதிகமாக சேரும்போது..  அந்த வண்டியை எடுத்துட்டு போய்… பாரி ஸ்டைல் அட்டாக் மாதிரி நடத்துவதற்கு அந்த வண்டியை வாங்குனாரா ? இல்லையா ? அந்த வண்டியை வாங்குன பிறகு,  வெளியே இருக்கக்கூடிய ஏஜென்சி அலாட்டு கொடுத்து,  ஈரோட்டில் ஒருத்தன, சேலத்துல ஒருத்தன, மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக காவல்துறை அரெஸ்ட் பண்ணிங்களா ?  இல்லையா ? அதையும் ஒத்துக்கொள்ளுங்கள்.

அதை எல்லாம் மறைச்சு, மறைச்சு மறைச்சு, எந்த விஷயத்தையும் வெளியே தெரியாம…  இது கிட்டத்தட்ட ஐஎஸ்ஐஎஸ் உடைய  கலவரம் பூமியாக கொங்கு பகுதி…  குறிப்பாக கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, எல்லாம் மாறிக்கிட்டு இருக்கு. ஒரு ஒரு முறையும் மறக்கும்போது, மறைக்கும் போது, பத்திரிக்கை நண்பர்களுக்கு நமக்கு தெரிய மாட்டேங்குது. கேள்வி கேட்க முடியவில்லை.

இந்த முறை இந்த ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ?  ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட்  கலந்துச்சுன்னு,  போட்டு எல்லாம் சேர்க்கும்போது,  வெடி வெடிக்குது. இதை ஏன்  காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிள் சொல்றாரு என்னாச்சுன்னா ? யார் வீட்டிலிருந்து வண்டி கிளம்பிச்சு ? சிசிடிவி பூட்டேஜ் என்ன இருக்கு ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |