Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ், ஓபிஎஸ், சசி வரட்டும்…! உக்கார்ந்து பேசுவோம்… எல்லாருமே MGR தொண்டர்கள்…!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதியை ஏற்றுக்கொண்டவர்கள் தானே அண்ணா திமுக உறுப்பினர்களாக வருகிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவர் விதியை ஏற்றுக் கொள்பவர்கள் தான் அண்ணா திமுகவில் வந்து இணைகிறார்கள். அப்படி ஏற்றுக் கொண்டவர் தானே எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ன விதிகளை உருவாக்கினார் ? எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் விதி என்று சொன்னாரா? இல்ல, ஓ பன்னீர்செல்வம் சொல்கிறது தான் விதி என்று சொன்னாரா? கொடி பிடிக்கின்ற தொண்டர் முடிவெடுப்பான். இது நான் சொல்லவில்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னது.

அப்போ அண்ணா திமுகவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ன விதிகளை உருவாக்கினாரோ அந்த விதிகளின்படி நீங்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம், வரட்டும் இபிஎஸ் வரட்டும், ஓபிஎஸ் வரட்டும், சசிகலா வரட்டும், எல்லாரும் உட்கார்ந்து பொதுவாக நான்கு பேர் பேசலாம். இப்போ சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது, நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது, சர்வ கட்சி நாளைக்கு கூட தேர்தல் ஆணையம் எல்லா கட்சிக்காரர்களும் கூப்பிட்டு நடத்துகிறார்கள்.

அப்ப யாரெல்லாம் போட்டி போடுகிறீர்கள் வாங்கள், இப்போது பொதுவா நாலு நபர்களை நியமித்து வாங்க, எல்லாரும் அந்தந்த ஊரில் கிளைகளில் எல்லாருக்கும் உறுப்பினர் அட்டையை பொதுவாக கொடுங்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படம், அம்மா படம் போட்டு எல்லோருக்கும் கொடுங்கள். எல்லா கிளைகளும் யாரோ ஒருத்தர் ஒரு கிளையில் உறுப்பினராக தானே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |