Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரசு மதுக்கடையையும் விடல… விற்பனையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைவரிசையை கட்டிய மர்மநபர்கள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் மதுக்கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள எட்டுச்சேரி மெயின் ரோட்டில் அரசின் டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக இருளாண்டி மற்றும் விற்பனையாளராக கதிர்வேல், முருகேசன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று  விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று கடையை திறக்க வந்த விற்பனையாளர்கள் கடையின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிச்சியடைந்து பேரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுக்கடையில் இருந்த 240 மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது உறுதியாகியுள்ளது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |