ரஜினியை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று சீமான் ரஜினி ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ரஜினி ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள்.
ஆனால் அவர் வரவில்லை என்பது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு தவறில்லை. ஆனால் ரஜினியின் உடல் நலம், அமைதி எல்லாம் அவருக்கு தேவை. அவருடைய ரசிகர்கலாகிய நீங்கள், அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் இன்னும் நிறைய படங்கள் எடுக்கட்டும். அதை பார்த்து நீங்கள் கொண்டாடுங்கள். ரஜினி அவ்வப்போது அரசியலுக்கு தேவையான கருத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கேற்ப நீங்கள் செயல்படுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.