Categories
அரசியல் மாநில செய்திகள்

போனா போகட்டும் ரூ. 1,000 கொடுக்கீங்க… உங்க வீட்டு துட்டையா கொடுக்குறீங்க… C.Mயை லெப்ட் & ரைட் விட்ட மாஜி அமைச்சர்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இன்னைக்கு இந்த ஆட்சி மேல கடுமையான அதிர்ச்சி இருக்கு. அந்த அதிருப்தி பிளஸ்… அம்மா உடைய திட்டங்கள் நிறைய இருக்கு.  அந்த திட்டங்களை எல்லாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்லிட்டு இருக்கோம். பொங்கல் பரிசு ரூ.5000 கொடுப்பேன்னு சொன்னாங்க. நாங்க ஆட்சியில் இருந் போது ஐயாயிரம் ரூபாய்  கொடுத்திருக்கலாமே என சொன்னாங்க.

ஏன் பொங்கலுக்கு 5000 கொடுக்கல ? பாராளுமன்ற தேர்தல் வருவதனால் இப்போ ஒரு ஆயிரம் ரூபாய் அப்படியே காமிச்சி இருக்காங்க. போனா போகட்டும் என 1000 ரூபாய். உங்க வீட்டு துட்டையா எடுத்து கொடுக்குறீங்க. நாங்க அன்னைக்கு நல்ல நிர்வாகம் பண்ணி,  அதன் அடிப்படையில மக்களுக்கு எல்லாமே கொடுத்தோம். அதே மாதிரி ஒரு 5000 கொடுத்துட்டாங்க.

பொங்கலுக்கு கரும்பு என்னங்க ? வாழ்க்கையினுடைய ஜீவாதாரம் என்பது புரட்சித்தலைவர் என்ன செய்வார்னா ? பொதுவா ஒரு திட்டம் போடுவதாக இருந்தால்,  அந்த திட்டத்தில் நஷ்டம்,  லாபம் கணக்கு பார்க்க மாட்டார். பொதுவாக அந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு மக்கள் பயன்பெறுகிறார்கள் ? அதுதான் பார்ப்பாரு. அதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பு.

அண்ணா என்ன சொன்னாரு ? கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு  பிரகாசிக்க நான் கைத்தறி துணியை கூட என் தலையில் வைத்து சுமந்து, தெருத்தெருவா கூவி விப்பேன் என சொன்னாரு. அந்த அளவுக்கு கைத்தறி நெசவாளர்கள் காப்பாற்ற என்கிற அடிப்படையில் புரட்சித்தலைவர் என்ன செஞ்சாரு ? ஆட்சிக்கு வந்த உடனே,  என்ன செஞ்சாரு ? உடனடியா கைத்தறி நெசவாளர்களுடைய வாழ்க்கை தரம் மேம்படனும் என சேலை, வேஷ்டி எல்லாம் கொள்முதல் செஞ்சு,  ரெண்டு கோடி பேருக்கு எண்களின் ஆட்சி காலத்தில் எல்லாருக்கும்  பொங்கல் பரிசாக கொடுத்தோம்.

கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் பண்ண வேண்டியதுதானே, பொங்கல் பண்டிகள்ல அரசு கொள்முதல் பண்ணனும் என அவுங்க விலை வச்சுட்டாங்க. இப்போ கரும்பை வாங்கவில்லை என்றால், அவுங்க கரும்பை எங்க கொண்டுபோய் போடுவாங்க. அதனால் விவசாயிகளுக்கு இந்த அரசாங்கம் பெருத்த துரோகத்தை பண்ணி இருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |