Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க தவறும் சென்னை மக்கள் – அஷ்வின் வேதனை!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவாகி உலகையே நடுங்க வைத்து கொண்டிருக்கிறது கொரோனா. இந்த கொடிய கொரோனா 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..

இதனால் உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகள் தள்ளி வைக்கப்பட் டும், ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் உலகளவில் பேசப்படும் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐபிஎல் போட்டியும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த அஷ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கையை சென்னை மக்கள் தவிக்கிறார்கள். மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

மேலும் சென்னையில் நிலவும் கடும் வெப்பநிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கலாம். அல்லது தமக்கு எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |