செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் ஆதார் தான் எல்லாம் என்று சொன்னார்கள், முதல் முதலில் ஆதாரத்தை அறிமுகப்படுத்தியது ஹிட்லர், ஹிட்லர் என்ன செய்கிறான் என்றால், கண் கருவிலி எடுக்கிறது, எல்லா விரல்களின் ரேகை எடுக்கிறது. அதை எடுத்த பிறகு, அதை கண்காணிக்கும் போது… நான் என் மனைவியோடு இருப்பதை கண்காணிக்க முடியும்; கண்ணின் கருவிழி வழியாக, எங்கே சென்றாலும் என்னை பின்தொடர முடியும். அதை வச்சுக்கிட்டு, என்னுடைய எண்ணை தட்டினால்,
என்னுடைய பரம்பரையின் வரலாறு வந்துவிடும். அதை வைத்துக்கொண்டு யூதர்களை அழித்தார்கள் அதுதான் ஹிட்லர் செய்தது. பிரிட்டன் இதே போல கொண்டு வந்து தனி மனித சுதந்திரத்தை பிரிக்கின்றது என நிறுத்தி விட்டது. நீங்கள் அதைப்பற்றி கவலைபடவில்லை கொண்டு வந்தீர்கள். இந்த ஆதார் கார்டு தான் எல்லாவற்றிற்கும் மேலே என்று சொன்னீர்கள்… சொந்த நாட்டு மக்களை நம்பாத பயங்கரவாதிகள் நீங்கள்.
இந்த ஆதாருக்கு மேலே இப்போ சிஏஏ என்று கொண்டு வருகிறீர்கள்… குடியுரிமை சட்டம்; நீங்கள் உங்களுடைய பிறப்பு இறப்பு சான்றிதழ்களை காமியுங்கள் என்று சொல்லுவீர்கள். அப்போ இதில் என்ன கொடுமை என்று பார்த்தீர்கள் என்றால்…. இந்த ஆதாருடன் நான் இணைக்கும் போது நாட்டின் முதன்மை அமைச்சர் ஐயா நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் இணைப்பார்களா? அதைத்தான் நான் கேட்கிறேன்,
நீங்கள் இணைத்து காட்டுங்கள் அதன்பிறகு நாங்களும் இணைத்துக் கொள்கிறோம். அம்மையார் மெகுபா முக்தி கேட்குறாங்க அல்லவா… நீங்கள் ( மோடி) நாட்டு மக்களிடம் குடியுரிமை சான்றிதழ் கேட்பது, இருக்கட்டும் முதலில் நீங்கள் எம்.ஏ படித்த சான்றிதழை காட்டுங்கள். அதன் பிறகு நாங்கள் குடியுரிமை சட்டத்தை காட்டுகிறோம் என சொல்கிறார். அதை ( மோடி ) காட்டுகிறாறா ? ஒரு தடவை ஆதாருடன், பிரதமர் இணைத்து காட்டட்டும், நாமளும் காட்டிருவோம்; அதுல ஒன்னும் சிக்கல் இல்ல என விமர்சித்தார்.