செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று சொல்லக் கூடிய நபர்… பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என கூறி, இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் அப்படின்னு… நடை பயணம் போலாம் இல்ல, 410 ரூபாய் சிலிண்டர் இன்னைக்கு 1100 ரூபாய் கடந்து போயிட்டு இருக்கு… அதுக்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் இல்ல. மக்கள் அதிலும் பாதிக்கிறார்கள்…
சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் வழங்குவேன் என்று சொன்னாங்க…. யாருக்காவது வருதா ? சொல்லுங்க. ஒரு ரூபாய் வருதுன்னு சொல்லுங்க. இங்க இருக்கக்கூடிய யாராவது ஒருவர் ஒரு ரூபாய் சிலிண்டர் மானியம் வருது சார் எனக்குன்னு சொல்லுங்க…. படிப்படியாக குறைந்து சிலிண்டர் மானியம் இன்னைக்கு ஜீரோக்கு வந்துடுச்சு… வந்துடுச்சா இல்லையா ? முழு பணமும் மக்கள் தான் கட்டுகிறார்கள்.
சிலிண்டருக்கு எந்த மானியமும் கிடையாது. ஆனால் மின்வாரியத்தில் அப்படி இல்லை. 9,000 கோடி கொடுத்த மானியம் இந்த வருடம் 4000 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து…. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் மின்வாரியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கொடுக்கிறார்கள். அப்படி கொடுக்கக்கூடிய மானியம் என்னவென்று கேடிங்கனா… அதாவது நுகர்வோர்கள் கட்டிட்டு உங்களுக்கு மானியம் கொடுப்பதாக அரசு சொல்லவில்லை.
மானியத்தை கழித்து விட்டு தான் மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்போ சிலிண்டருக்கு மானியம் கொடுக்கணும்னு நினைக்கக் கூடிய ஒரு அரசா இருந்தா…. மக்களுக்கு பயனுள்ள அந்த திட்டத்தை செயல்படுத்த கூடிய அரசா இருந்தா… மானியத்தை கழித்துவிட்டு சிலிண்டருக்கு மீதி இருக்ககூடிய கட்டணத்தை மட்டும் வசூல் பண்ணலாம். எவ்வளவு தொகை இருக்கோ அதை மட்டும் வசூல் பண்ணலாம். இல்ல. ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் எடுத்த நோக்கம் என்னன்னா… மானியத்தை கட் பண்ணிடனும். அதுக்காக ஆரம்பத்தில் சொல்லிட்டு, அப்படியே படிப்படியாக குறைச்சிட்டாங்க என தெரிவித்தார்.