செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் இலவசம் என கொடுப்பது தான் இப்போது விவாதம் நடந்து கொண்டு இருக்கிறதே தவிர இது எல்லாமே ஆப்பிள், ஆரஞ்சை கம்பர் செய்வது போல்… இலவசம் என்பது என்ன ? மோடி அரசு கர்ப்பிணி பெண்களுக்கு மானிடரி சப்போர்ட் செய்கிறார்கள், அதுவும் குறிப்பாக யார் இருக்கிறார்கள் below ppl heart அந்தக் குழந்தைக்கு ஊட்டச்சத்திற்கு அந்த பணம் போக வேண்டும், அந்த குழந்தை நன்றாக புரோட்டின் வாங்கி சாப்பிட வேண்டும்.
என்று நீங்கள் என்னிடம் இலவசத்தை விவரிக்க சொன்னீர்கள். 1,500 சொல்லுங்கள், அடுத்த பத்தாயிரம் சொல்லுங்கள், அடுத்து 50,00 சொல்லுங்க, நீங்கள் ஒரு பத்திரிகையில் இருக்கிறீர்கள் 35 ஆயிரம் சம்பளம் வாங்குகிறீர்கள், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். இன்னும் 10 வருடம் கழித்து இந்த மாநிலம் எங்கே போகுது என்பதற்காகத்தான் இந்த டிபேட் விவாதமே தவிர, நீங்களும் நாங்களும் சண்டை போட்டு அரசியல் பாய்ண்ட் ஸ்கோர் பண்ணி, அண்ணாமலை ஜெயித்து விட்டார் என்பது அல்ல.
நாங்கள் அதைப் பற்றி விவாதித்து கொண்டு இருக்கிறோம், இலவசம் கொடுப்பதில் அதிமுகவை எதிர்க்கவில்லை, இன்னொரு கூட்டணி கட்சியை எதிர்க்கவில்லை என்பதல்ல. என்னுடைய தேசிய தலைவர் இலவசத்தை பற்றி பார்ட்டினுடைய ஸ்டாண்டர்ட் தெளிவாக சொல்லும் போது, நான் கூறுவேன். அதைப்பற்றி சொல்வதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
நாம் தற்போது இலவசத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். மோடிஜி அவர்கள் எப்போது இலவசத்தை பற்றி இலவசத்தினால் இந்த நாடு பின்னோக்கி போக ஆரம்பிக்கிறது என்று எப்ப சொல்ல ஆரம்பித்தாரோ, அப்போ இருந்து நான் பேச ஆரம்பித்து இருக்கிறேன் என தெரிவித்தார்.