தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட இந்த இரண்டு தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்தது.
இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இடைத்தேர்தல் தானே எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்று எங்களுக்கு ஓட்டு போடாமல் மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.இது ஒரு பெரிய விஷயம் இல்லை . பணம் கொடுத்து வெற்றி பெரும் இந்த போக்கை தொடர்ச்சியாக விடுவது நல்ல. பணம் கொடுத்து வெற்றிபெறும் முறை ரொம்ப ஆபத்தாகிவிடும். ஒரு நல்ல அரசியல் , நல்ல அரசு அமைவதற்கு வாய்ப்புகள் உருவாகாது.