நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே தனியார் பேருந்து விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களைச் சந்தித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ நடிகர் சங்கத் தேர்தலில் நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும். அதேபோல் நடிகர் சங்கக் கட்டடத்தை திருப்தியாக கட்ட முடியாத நடிகர்கள் நாட்டைத் திருத்த வருகிறேன் என்பது வேடிக்கையாக உள்ளது’ என நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோரை மறைமுகமாக சாடினார்.
மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிட கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன், ஒரு தொகுதியில் ஆவது நின்று வென்றுவிட்டு பேசட்டும் எனக் கூறினார்.