இறைந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இறந்தவரின் உடலை பாதுகாப்பாக கையாள வேண்டும் என ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தது தெரியவந்தால் வழங்கமான நடைமுறைப்படி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை முறையாக கையாளுவதில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.