பொறுப்புக்காகவும் , மக்களிடையே மத சண்டையை உண்டு பண்ணவும் இந்து மக்கள் கட்சி துணை செயலாளர் மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இரவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது தம்மை வழிமறித்த ஒரு கும்பல் தாக்கியதாகவும் , வெட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை தனிப்படை அமைத்து தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தது. அதே நேரத்தில் இந்து மக்கள் கட்சிதுணைச்செயலாளர் வெட்டப்பட்டு ,தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது.
போலீசார் நடத்திய கிடுபிடி விசாரணையில் பகவான் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு, அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தது அம்பலமானது. பொறுப்பு கிடைக்க வேண்டுமென்றும், மத பிரச்சனையை கிளப்ப வேண்டுமென்றும் இவர் இப்படி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையிடம் பொய்வழக்கு கொடுத்ததற்காக பகவான் நந்து மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள போலீசார் தயாராகி வருகின்றனர். பகவான் நந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.