ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு, அது பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன் என்று மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5,6 மாதங்கள் உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை செய்தார். டிசம்பரில் அதற்கான அறிவிப்பும், ஜனவரியில் கட்சியும் தொடங்கப்படும் என்று ரஜினி அறிவித்ததைத்தொடர்ந்து பல்லவேறு அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி கருத்து சொல்லுமாறு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. ரஜினி கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு கொள்கைகளை அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு அது பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.