செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி இனி நடை பயணம் செய்தால் என்ன ? செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது குலாம் நபி அசாத். கட்சியில் இருந்து வெளியே ஒரு ஒருத்தர் போகிறார் என்றால் என்ன காரணத்திற்கு போகிறார் ? என்று சொல்லனுமா வேண்டாமா? நான் இத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.நான் எட்டு மாநிலத்திற்கு பொதுச்செயலாளர் என்று முறையில் பொறுப்பாக இருக்கிறேன். 8-ல் 7-ஐ ஜெயித்து கொடுத்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று கூட ஜெயிக்காதவர்கள், இடையில் வெளியே சென்று வந்தவர்கள், அவர் யாரை சொல்கிறார் என்று சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதே வார்த்தை குலாம் நபி அசாத் சொல்லியிருக்கிறார். ஆங்கில தொலைக்காட்சி அவரைப் பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் அவர் சொல்கிறார், இடையில் வேறு கட்சிக்கு ஓடி போய்ட்டு வந்தவர்கள் எல்லாம் அறிவுரை சொல்வதா ? என்கிறார். நம்ம ஊர்க்காரர் பெயர்கூட வருகிறது, மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.
கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட போது, அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் அதை எதிர்க்கவில்லை. அதனால் ஒரு சர்வதேச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இன்றைக்கு அதனை மீட்க வேண்டும் என பேசக்கூடிய அரசியல்வாதிகள் இங்கு தமிழக மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கம்.
ஏனென்றால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஏற்படுவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக…. ஏனென்றால் 98ல் பிஜேபி சர்க்கார் வந்தது. அதற்கு 25 ஆண்டுகள் 24 ஆண்டுகளுக்கு முன்னாடி 1974 இல் கட்ச தீவானது இந்த நாட்டின் நலனுக்கு விரோதமாக, இந்திய மீனவர்களின் நலனுக்கு விரோதமாக, திமுகவின் கூட்டணி கட்சி, காங்கிரஸ் செய்தது குற்றம் என தெரிவித்தார்.