அதிமுகவில் கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அதை சிறப்பாக கொண்டாடுவதற்காக கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சிவி சண்முகம் பேசியதாவது, திமுக கட்சியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரை நாட்டை விட்டு விரட்டுவதற்காக தான் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் இறப்பதற்கு காரணம் திமுகவை சேர்ந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின் தான். அம்மாவின் மரணத்திற்கு காரணமான திமுகவுடன் ஓபிஎஸ் உறவு வைத்துள்ளார்.
அதிமுக கட்சிக்கு துரோகம் இழைப்பவர்கள் எல்லோரும் அனாதையாகத்தான் போவார்கள். ஓபிஎஸ் உடன் இருப்பவர்களை அவர்களுடைய நிழல் கூட நம்பாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போது துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று 16 மாதங்களில் பொதுமக்களுடைய வெறுப்பை அதிக அளவில் சம்பாதித்துள்ளனர். இதனால் இந்த ஆட்சியை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியலாம். மேலும் திமுக செய்யும் அனைத்து அநியாயங்கள் மற்றும் அராஜகங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.