Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர்கள்: “நீங்கள் தேடி வர வேண்டாம்…. நாங்கள் உங்களை தேடி வருகிறோம்”…. முதல்வர் ஸ்டாலின்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று  நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டம் திருமுல்லைவாயல்  இடத்தில் உள்ள ஜெயா நகரில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கும் குடும்ப அட்டை 20, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 39, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி 38, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 என மொத்தம் 101  பெருக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் உள்ள மாணவி தர்ஷினி வீட்டுக்கு சென்று காலை உணவை கலைத்தார். பின்பு மக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டியும், உயர் மின்கோபுர விளக்குகளையும் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து  முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை 30, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 6, குடும்ப அட்டை 18, கிராம நத்தம் பட்டா 46 மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 22 என மொத்தம் 122 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இதற்கிடையில் நரிக்குறவர்கள் முதலமைச்சரிடம் “எங்கள் குடியிருப்புக்கு நீங்கள் நேரில் வந்ததே நாங்கள் எதிர்பர்க்கவே இல்லை, இன்ப அதிர்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாகவும் உள்ளது நீங்கள் பொறுப்பேற்றவுடன் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், சாலைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை அமைத்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்தனர்.

இதற்கு முதலமைச்சர்  “எது தேவையென்றாலும், எப்போது வேண்டுமானாலும் மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம். மேலும் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி டெல்லிக்கு சென்ற பிரதமரை சந்தித்தபோது கூட நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி மனு வழங்கினேன்” என்று கூறினார்.

இந்நிகழ்வில் முக ஸ்டாலின் பேசியதாவது. “தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவர்கள், பழங்குடியின மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஆய்வு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் என்னென்ன தேவைப்படகிறது என்பதை தெரிந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் அனைவருக்கும் கடந்த 4, 5 மாதங்களில் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

நீங்கள் தேடி வரத் தேவையில்லை. நாங்களே தேடி வந்து உங்களுக்கு உதவி செய்து தர கூடிய ஒரே அரசு இந்த அரசு. எங்கள் அரசு என்று கூட சொல்ல மாட்டோம், நம்முடைய அரசு ஏனென்றால் நீங்கள் அதில் இருக்கிறீர்கள். நமது அரசு என்றால் இது உங்களுடைய அரசு. விளிம்புநிலை மக்களுக்கான அரசு. அதனால் தான் அவர்களின் ஒவ்வொரு குடும்பமாக தேடி ஒவ்வொரு அடிப்படை தேவைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம்.

விளிம்புநிலை சமுதாயத்திலுள்ள பெண் பிள்ளைகள் துணிச்சலாக பேசுவதை பார்த்து எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைக் குரல். இந்த பெண் பிள்ளைகள் வழியாக இன்றைக்கு ஒலிக்கக்கூடிய காட்சியை நாம் பார்க்கிறோம். அதனால் தான் விளிம்புநிலை மாணவிகள் திவ்ய, பிரியா, தர்ஷினி ஆகிய 3 பேரையும் எனது அறைக்கு அழைத்து பேசினேன்.

பெண்ணுரிமைக்காக போராடிய திராவிட இயக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, இந்த வெற்றி என்பதை நான் பெருமையோடு சொல்கிறேன். எனவே அந்த வெற்றியை யார் மூலமாக பார்க்கிறேன் என்றால், அஸ்வினி (மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவ பெண். கோவிலில் நடந்த அன்னதானத்தில் உணவு அளிக்க மறுக்கப்பட்ட பெண்) மற்றும் திவ்யா வடிவிலும். சொல்லப்போனால் நான் நெகிழ்ந்து போனேன், மகிழ்ச்சியடைந்தேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டுக்கு போனேனோ, அதேபோல் திவ்யா, தர்ஷினி வீட்டுக்கும் வந்திருக்கிறேன்.

நமது அரசு நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வில் அப்படியொரு அணையா விளக்கை ஏற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த அரசு உங்களுக்காக (நரிக்குறவர்கள்) என்றைக்கும் துணைநிற்கும். நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்கெல்லாம் சட்டரீதியாக நிச்சயமாக எல்லாத்தையும் நாங்கள் நிறைவேற்றி தருவோம். தமிழ்நாட்டு மக்களுக்காக, ஒவ்வொரு இலக்கினை எட்டிடவும் – இந்த திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இது தொடரும் இந்த அரசு உங்களுக்காக தொடர்ந்து பாடுபடும்” என்று கூறி உள்ளளர்.

இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பும் வழியில் அம்பத்தூர் காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள், துணை மேயர் எஸ்.சூர்யகுமார், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார்,  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ,  நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டனர்.

Categories

Tech |