திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசை செயல்பட வைப்போம் என தெரிவித்துள்ளார். மக்கள் முன்வைத்த ஒரு லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் என அவர் கூறியுள்ளார். மக்களின் இந்த கோரிக்கைகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் நானே முதல்வர் அலுவலகத்திற்கு அந்த கோரிக்கை மனுக்களை அனுப்பப் போகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்றால் ஐவர் குழு அமைத்து தலைமை செயலருக்கு மனுக்கள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு கோரிக்கை:
பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர்கள் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களின் உரிமை, பணி பாதுகாப்பு, வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை திமுக ஏற்றுக்கொள்ளாது என அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.