கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனுசூட் செய்த உதவிக்காக அவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகளை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உயிருக்கு போராடிய குழந்தை ஒன்றுக்கு சோனுசூட் செய்த உதவியின் மூலம் அந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது. இந்நிலையில் உயிர் பிழைத்த அந்த குழந்தையின் தாய் நடிகர் சோனு சூட் இன் உதவியை நினைவுகூறும் விதமாக தனது குழந்தைக்கு சோனு என்று பெயர் சூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.