ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும். 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஹிந்தி மொழியை எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது ?
பேச்சு ஒரு போதும் தமிழினத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். நீங்கள் எல்லையை தாண்டி எவன் வந்தாலும், அத்துமீறி உள்ள வந்தால், எங்கள் மண்ணுக்குள், எங்கள் எல்லைக்குள், எங்கள் நிலத்திற்குள், எவன் வந்தாலும் அவனை தூக்கி போட்டு மிதித்து, அவன் மூச்சை நிறுத்து என்கின்ற விளையாட்டு.
இனிமேல் எங்களிடம் வாலாட்டினால், அது நாங்கள் வளர்க்கும் மாடாக மட்டும் தான் இருக்க வேண்டும். வேறு எவன் வாலாட்டினாலும் இழுத்து வச்சி ஒட்ட நறுக்குவோம்னு சொன்ன அந்த வார்த்தையை மீண்டும் சொல்றோம். சண்டை நடந்தால் தலவிரிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ இடத்தில் நடந்திருக்கு… சண்டை என்றால் சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழன், தமிழகத்தைச் சார்ந்த வீர வரலாறு புறநானூறை நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றால் திரும்ப படிங்க என தெரிவித்தார்.