Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்ப அரசியல் செய்யுறாங்க…. திமுகவில் இருக்க பிடிக்கவில்லை… கு.க செல்வம் பேட்டி

ஆயிரம்விளக்கு திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம்… திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக பாஜகவில் இணைவதாக கூறி டெல்லி சென்று திரும்பினார். பின்னர் நான் பாஜகவில் இணைய வில்லை என்று பேட்டி அளித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய து.இதனிடையே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாஜக கமலாலயம் சென்ற அவர்… முடிந்தால் திமுக என்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்யட்டும் என்று சவால் விடுத்தார்.

இன்று செய்தியார்களிடம் பேசிய, திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டேன். வயதாகிவிட்டது, உடல் நிலை சரி இல்லை, பணம் இல்லை என திமுகவில் என்னை ஒதுக்கினார்கள். மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல… குடும்ப அரசியல் காரணமாக விளக்குகிறேன் என்று கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |