Categories
அரசியல் மாநில செய்திகள்

பாத்தீங்கல…! ”1 லட்சம் பேர் கூடுனாங்க”…. ஈபிஎஸ்_சுக்கு செம மாஸ்… ஆனால் ஓபிஎஸ்_சுக்கு அப்படி இல்ல…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  எடப்பாடியார் பக்கம் தான் பெரும்பான்மை இருக்கின்றது நீங்கள் பார்த்தீர்கள், அம்மா அவர்கள் வருகிற போது எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ,  அப்படி ஒரு எழுச்சி பொதுக்குழு வருகிறபோது….  இரண்டு பேரும் வந்தார்கள், இதை  யாரும் சொல்லி வைத்து செய்வது கிடையாது…

10 பேர் இருக்கும் இடத்தில் சொல்லலாம்,  ஒரு லட்சம் பேர்  இருக்கும் இடத்தில் எப்படி சொல்ல முடியும்? ஒரு லட்சம் பேர் கூடி அண்ணன் எடப்பாடி அவர்களை வரவேற்று மாலை அணிவித்து அங்கே பொதுக்குழுவில் பங்கேற்கிறார்கள். அதே பொதுக்குழுவுக்கு தான் ஓபிஎஸ் அண்ணனும் வருகிறார். ஏன் நீதிமன்றத்திற்கு  போனீர்கள் ? காவல் நிலையத்தில்போனீர்கள் ? இது ஒரு குடும்ப சண்டை, அண்ணன் தம்பி சண்டை, குடும்பத்திற்குள் பேசி தீர்த்துக்கொள்ளலாம், என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

அதை விட்டுட்டு நீங்கள் போவதற்கு என்ன காரணம் ? நீங்கள் தலைவர்களையும் புறக்கணித்து கொண்டிருக்கிறீர்கள், தொண்டர்களையும் புறக்கணிக்கிறீர்கள், தலைமையையும் புறக்கணிக்கிறீர்கள். நீங்கள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பி எத்தனை நாள் கட்சி நடத்துவது ? நீதிமன்றம் எத்தனை நாளைக்கு தீர்ப்பு சொல்லி கொண்டு இருப்பார்கள் ? அவர்களுக்கு எத்தனை பணிகள் இருக்கிறது ?  நீதி அரசர்களுக்கு இந்த நாட்டில் எத்தனை பிரச்சனைகள் இருக்கிறது ?

ஒரு கட்சி பிரச்சினையை நீங்கள் எத்தனை முறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது ? அதுவும் இரவோடு இரவாக, அதுல என்ன உங்களுக்கு பலன் கிடைக்கிறது ? தொண்டர்களிடத்திலே தான் நீங்கள் முறையிட வேண்டுமே தவிர,  ஏனென்றால் இது தொண்டர்களால் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் என தெரிவித்தார்.

Categories

Tech |