அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்தார். பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதோடு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை. பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி. ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விழித்திருங்கள் – விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை பின்பற்ற்றுங்கள் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.