தமிழகத்தில் குடும்ப அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவானர் அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்தாக திமுக என்று அடிக்கடி கூறி வருகின்றனர். தமிழகத்துக்கு மன்மோகன் அரசு 16 ஆயிரத்து 355 கோடி ஒதுக்கீடு செய்தது. பிரதமர் மோடி அரசு தமிழகத்துக்கு 32 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக என்ன செய்திருக்கிறது என பட்டியலிடுங்கள். நாங்கள் தமிழகத்துக்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிடுகின்றோம். தயார் திமுக விவாதிக்க தயாரா ?
இங்கே மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. நான் மத்திய மோடி அரசின் சார்பாக பாறையைப் போல இந்த ஆட்சிக்கு பாதுகாப்போம், இந்த நல்லாட்சிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊழல் பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி உள்ளது. 2ஜி போன்ற ஊழலை செய்த திமுக – காங்கிரசிற்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு முன் உங்கள் குடும்பத்தை முதலில் திரும்பிப் பாருங்கள். வாரிசு அரசியலை படிப்படியாக பாஜக ஒழித்து வந்துள்ளது. தமிழகத்திலும் அதைச் செய்வோம். குடும்ப அரசியல் நடத்திவரும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி வருகிறார்கள். தமிழகத்திலும் குடும்ப அரசியல் நடத்தி வருபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.