Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவா ? அதிமுகவா அப்படி சொல்லட்டும் பாப்போம்….! ”நாங்கள் தான் கெத்து” மாஸ் காட்டிய கமல்ஹாசன் …!!

சமமான கட்சி , சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தி நேர்மை தான் என்று சொல்லட்டும் பார்ப்போம் என கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் நிதீ மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மைய்யம் கூட்டணி அமைக்குமா அமைக்காத என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. நாங்கள் எங்கள் கட்டமைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கிடைத்திருக்கும் வாக்கு விழுக்காடு இதையெல்லாம் பார்க்கும்போது நாங்கள் தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி. மூன்றாவது அணி அமைந்துவிட்டது.

நாங்கள் கூட்டணி வைப்பது நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். நல்லவர்கள் கூட்டணி அமையும் போது இது மக்கள் நீதி மய்யம் முதல் அணியாக இருக்கும். 3 மூன்றாவது அணியாக எல்லாம் இருக்காது. நல்லவர்கள் வேறு கட்சியில் இருக்கிறார்கள். மனம் வெதும்பி இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வரவேண்டும் என்பதற்கான ஒரு அழைப்பு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மையத்தின் உத்தி என்ன என்ற கேள்விக்கு நேர்மைதான் மக்கள் நீதி மையத்தின் உத்தி.

எங்களுக்கும் அதுதான் உத்தி என்று சொல்லட்டுமே பார்ப்போம். சமமான கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள், சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தி நேர்மை தான் என்று சொல்லட்டுமே பார்ப்போம்.நாங்கள் செய்யப்போவது பழி போடும் அரசியல் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல, வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நம்பி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழகத்துக்கு என்ன தீர்வு என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்வோம். வேலையின்மை தமிழகம் தாங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.ஒரு லட்சம் பேர் புதிதாக மக்கள் நீதி மையத்தில் சேர்ந்திருக்கிறார்கள். சட்டசபை தேர்தலில் என்னுடைய குரல் கண்டிப்பாக ஒலிக்கும். எனக்கு மாற்றம் வேண்டும் என்பதே முக்கியம். என் கட்சி யாரை முதல்வர் என்று சொல்கிறார்களோ அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

அவர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். என்னைப்பொறுத்தவரை முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படுவீர்கள் செயல்படுவேன். பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு நல்லவர்களுடன் என்று சொல்லியுள்ளேன் நல்லவர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் இங்கே வந்து விடுங்கள் என்று சொல்லி உள்ளேன்

Categories

Tech |