தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததால் தளபதி விஜயின் 67-வது திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவை முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க வைப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், சூர்யா நடிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிடவில்லை. மேலும் நடிகர் சூர்யா நடித்தால் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.