Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்மையை போற்றுவோம்…! பெண்மையை பாதுகாப்போம்…! மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஆரி அர்ஜுனன்…!!!

பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் 4 இல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அம்மாக்களுக்கும், தம்பியாக ஏற்றுக்கொண்ட அக்காக்களுக்கும், என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்ட தங்கைகளுக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். என்னுடைய வெற்றிக்கு பின்னால் என் தாய்,என் அக்கா, என் மனைவி, இப்போது நீங்களும் இருக்கின்றீர்கள் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கான உரிமையை பேச்சளவில் இல்லாமல் செயல் அளவில் செயல்படுத்துவோம். பெண்மையைப் போற்றுவோம். பெண்மையை பாதுகாப்போம் என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CMJdXRUhgm-/

Categories

Tech |