செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை.
ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. அதனால் கரும்பு வேண்டாம் என்று சொல்கிறார் போல… அதனால் கரும்பை பொறுத்தவரையில் எல்லோருக்குமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அது ரேஷன் கார்டு மூலமாக பொங்கலுக்கு அளிக்க வேண்டும் என்பது விவசாயிகளுடைய கோரிக்கை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோரிக்கை, அண்ணன் எடப்பாடியார் அறிக்கை விட்டிருக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் கரும்பு கொள்முதல் செய்யாவிட்டால், அது விவசாயிகளுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
திமுகவின் பொங்கல் பரிசை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்ற யானை பசிக்கு சோளப்பொறி. எதிர்பார்த்தது அவ்வளவு.. ஆக மொத்தத்தில் சோள பொறி மாதிரி போட்டு விட்டார்கள். என்னோடது சொத்து விவரம் எல்லாம் தெளிவாக தேர்தல் ஆணைய அபிடவிட் இருக்கே. இன்னைக்கும் கூட வலைதளத்தில் தேடிப்பாருங்கள் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அதெல்லாம் தாராளமாக பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். அதிமுக எதிர்ப்பை அடுத்து திமுக பொங்கலுக்கு முழு கரும்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.