ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இதற்காக தனிப்பட்ட கட்டணமோ, சந்தாவோ தேவையில்லை என்றும் கூறியுள்ளது.