Categories
தேசிய செய்திகள்

பைக் இருக்கு ஆள காணோம்…. வீட்டில் புது கான்கிரீட் தரை…. வலுத்த சந்தேகம்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மீட்க்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டனர். அந்த விசாரணையின் போது பாயிப்பாட்டு பகுதியைச் சேர்ந்த பிந்துமோனின் நண்பரான முத்துக்குமார் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் முத்துக்குமாரின் வீட்டை சோதனை செய்தனர்‌. அப்போது வீட்டின் பின்புறம் ஒரு பகுதியில் புதிதாக கான்கிரீட் போடப்பட்டிருந்தது. அந்த கான்கிரீட்டை உடைத்து பார்த்தபோது அதில் பிந்துமோன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிந்துமோன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தன்னுடைய நண்பனை கொலை செய்து புதைத்த முத்துக்குமார் தற்போது தலைமறைவாகி விட்டதால் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பாபநாசம் பட பாணியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |