Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம்… அடுத்தடுத்த 2 கதைகளுக்கு ஓகே சொன்ன ரஜினி…!!

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த இரண்டு படத்தின் கதைக்கு சம்மதம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடல் நலக்குறைவால் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடரலாம் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

அதன்படி வரும் 8ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினி தனது அடுத்தடுத்த படத்திற்கான கதைகளைக் கேட்டு 2 கதைகளுக்கு சம்மதம் அளித்துள்ளார். அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |