ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு உள்ளிட்டவை விநியோகிக்கும் பணிகளை ரஷ்யா ஏற்க உள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராகாஸ்மோஸ் பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக இஸ்ரோவும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உபகரணங்களையும் ரஷ்யா வழங்க உள்ளதாகவும், விண்வெளி வீரர்களுக்கு தேவையான காற்று, நீர் உணவு வழங்கும் உபகரணங்கள் கழிவுகளை வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் உடல் வெப்பநிலையை பராமரிக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை ரஷ்ய வழங்க வேண்டுமெனவும் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.